- வெள்ளைபூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து சாப்பிட கொடுக்க குழந்தைகளின் சளி தொல்லை நீங்கும்.
- வேப்பிலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி பிடரியில் பூசிக்கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
- தூதுவளை செடியில் ரசம் வைத்து மதியம் சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
- முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர மழை காலங்களில் சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
- பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி சரியாகும்.
- கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு சரியாகும்.
- ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.
- முள்ளங்கி சாறு சாப்பிட ஜலதோஷம், தலைவலி, இருமல் குணமாகும்.
- கற்பூரவல்லி இலையை சூடாக்கி நெற்றியில் பற்று போட்டால் சளி உடனே குணமாகும்.
- அதிமதுரம் பொடி ஒரு கிராம் காலை, மாலை சர்க்கரை சேர்த்து உண்ண சளி, இருமல், தொண்டைவலி, மலசிக்கல் குணமாகும்.
தமிழ் மருந்தை பயன்படுத்துவோம்! ஜலதோஷம் நீங்கி சந்தோசமாய் வாழ்வோம்!
மீண்டும் சந்திக்கிறேன்!