ஞாயிறு, 1 மார்ச், 2009

வாழையின் பயன்கள்

முக்கனிகளில் ஒன்றான வாழையின் பயன்களை பற்றி இதில் பார்ப்போம்.
  • இரவு சாப்பற்றிக்கு பிறகு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல் ஈறு வீக்கம், பல்லில் இரத்த கசிவு போன்ற நோய்கள் வராது
  • பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமலை ஒரு வாரத்தில் குணமாகும்.
  • தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் வராது.
  • பேயன் வாழை பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனக்கற்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்னையில் ஊறவைக்க வேண்டும். பாட்டிலை தினமும் வெயிலில் வைக்கவும். மூன்று நாட்கள் ஊறிய பின் தினமும் ஒரு வில்லை எண்ணையுடன் சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.
  • நன்றாக பழுத்த நாட்டு வாழை பழம் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
  • கற்பூர வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காய வைத்து, நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ரெடி பண்ண வேண்டும். ஏலக்காய் பொடி செய்து கொள்ள வேண்டும். வாழைக்காய் பவுடர் அரை கிலோ, பனக்கற்கண்டு இருபது கிராம், ஏலக்காய் பொடி பத்து கிராம் கலந்து வரும் பவுடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
  • வாழை தண்டு சாரு குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெரும்.
  • வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்னையில் குழைத்து தடவினால் தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் குணமாகும்.
  • வாழை பட்டைஎய் தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.
  • வாழை பூ பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம், நீரழிவு நோய் குணமாகும்.

ஆகவே வாழை பழம் சாப்பிடுவோம் உடல் நலம் பேணுவோம்.

மீண்டும் சந்திக்கிறேன்!

----- Click Here ----- Web-Stat web traffic analysis