ஞாயிறு, 29 மார்ச், 2009

வாதநோய் போக்கும் வலிமையான மூலிகைகள்

வாதநோய் போக்க சில மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சில பயனுள்ள டிப்ஸ் இதோ!

  • தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின் இரண்டு பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் பக்கவாத நோய் குணமாகும்.
  • குப்பைமேனி இலை சாறு எடுத்து தினமும் ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
  • முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசி மாவுடன் கலந்து அடைசெய்து சாப்பிட வாதம், பிடிப்பு குணமாகும்.
  • புரச மரத்தின் புதிய கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து பாலுடன் கலந்து குடிக்க வாதநோய் உடனடியாக குணமாகும்.
  • பேய் துளசி - கழுதை தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி தூளாக்கி சலித்து வைத்து கொள்ளவும். இந்த தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வர வாதநோய் குணமாகும்.
  • எட்டி மரப்பட்டை உரித்து உள் பட்டை எடுத்து காய வைத்து இடித்து சலித்து பொடியாக்கி கால் ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்து வர வாதநோய் சரியாகும்.
  • காக்கரட்டான் வேர், மூக்கிரட்டை வேர் சுத்தம் செய்து நறுக்கி 50 கிராம், நொச்சிஇலை 100 கிராம், சுக்கு 50 கிராம், ஒரு மிளகு, 25 சீரகம், 200 நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு சங்கு அளவு கொடுத்து வர இளம்பிள்ளை வாதம் குணமாகும்.
  • வாதநாராயணன் இலை, வேர், பட்டை போன்றவற்றை மைய அரைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு நீரில் சிறிது கலந்து குடித்து வர வாத நோய் குணமாகும்.
  • மாவிலங்க இலை சாருடன் சம அளவு தேங்காய் பால் சேர்த்து காய்ச்சி வெறும் வயற்றில் 100 மில்லி வரை குடித்து வர வாதவலி, வாதபிடிப்பு, கைகால்வலி நீங்கும்.
  • நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வர வாதத்தால் ஏற்படும் உடல் வலி தீரும்.

மீண்டும் சந்திப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please put your Comment here

----- Click Here ----- Web-Stat web traffic analysis