புதன், 18 மார்ச், 2009

மூலம் போக்கும் முக்கிய மூலிகைகள்

மூலநோய் மிகவும் கொடுமையான நோய். மனிதர்களில் பலர் டிப் டாப்பாக இருப்பார்கள். ஆனால் பாவம் அவர்கள் மூலநோயால் அவதிப்படுவர். வெளியே தெரியாது. நடக்கவும், இருக்கவும், வேலை செய்யவும் அதிகம் அவதிபடுவார்கள்.
ஆகவே மூலநோயை ஒழிக்க சில டிப்ஸ் . . .
  • அகத்திகீரை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மாலை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • வல்லாரை இலைகளை இட்லி சட்டியில் பசும்பால் விட்டு தட்டில் துணி மீது பரப்பி நன்றாக அவிந்தவுடன் நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர மலச்சிக்கல் வராது.
  • பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும்.
  • குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி வெயிலில் காயவைத்து, பவுடராக்கி கொள்ளவும். பொடியை ஒரு சிட்டிகை பசு நெய்யுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். தவறாமல் 48 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் பூண்டோடு அழிந்து விடும்.
  • அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வர இரத்த மூலம் நீங்கும். மூலக்கடுப்பு உஸ்ணம் நீங்கும்.
  • கனிந்த வாழைபழம் , சீரகம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
  • சுக்கு, மிளகு, கடுக்காய், பூண்டு, பிரண்டை, கற்றலை வேர், நீர்முள்ளி வேர் முதலியவற்றை சம அளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்து வர உள் மூலம் குணமாகும்.
  • காய்ந்த திராட்சை பழம் வாங்கி பசும்பாலில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து பழத்தை பிழிந்து அந்த சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலசிக்கல் தீரும்.

தமிழ் மருந்து சாப்பிடுவோம் - மூலநோயை முடுக்குவோம் !

மீண்டும் சந்திக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please put your Comment here

----- Click Here ----- Web-Stat web traffic analysis