சனி, 4 ஏப்ரல், 2009

ஜலதோஷம் போக்கும் சரியான மருந்துகள்

நாம் மழையில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் ஜலதோஷம் ஏற்படும். இதனால் பலருக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கும். ஆகவே ஜலதோஷம் ஏற்படும் போது கீழ்க்கண்ட மருந்துகளை உபயோகிங்கள். உங்களுக்காக இதோ சில . . .

  • வெள்ளைபூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து சாப்பிட கொடுக்க குழந்தைகளின் சளி தொல்லை நீங்கும்.
  • வேப்பிலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி பிடரியில் பூசிக்கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
  • தூதுவளை செடியில் ரசம் வைத்து மதியம் சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
  • முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர மழை காலங்களில் சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
  • பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி சரியாகும்.
  • கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு சரியாகும்.
  • ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.
  • முள்ளங்கி சாறு சாப்பிட ஜலதோஷம், தலைவலி, இருமல் குணமாகும்.
  • கற்பூரவல்லி இலையை சூடாக்கி நெற்றியில் பற்று போட்டால் சளி உடனே குணமாகும்.
  • அதிமதுரம் பொடி ஒரு கிராம் காலை, மாலை சர்க்கரை சேர்த்து உண்ண சளி, இருமல், தொண்டைவலி, மலசிக்கல் குணமாகும்.

தமிழ் மருந்தை பயன்படுத்துவோம்! ஜலதோஷம் நீங்கி சந்தோசமாய் வாழ்வோம்!

மீண்டும் சந்திக்கிறேன்!

1 கருத்து:

  1. உங்கள் பதிவை ஜீஜிக்ஸ்.காம் (jeejix.com) இல் செய்யுங்கள் சென்ற வாரம் நீங்கள் எழுதிய பதிவை அநேகர்கள் பார்வையிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

    பதிலளிநீக்கு

Please put your Comment here

----- Click Here ----- Web-Stat web traffic analysis