- இரவு புல்லின் மெது மெல்லிய துணியை விரித்து அதிகாலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும்.
- கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயை கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர தலை முடி அடர்த்தியாகவும் , கருமையாகவும் வளரும்.
- வெள்ளைபூண்டையும் , துத்தி இலையையும் நறுக்கி நல்ல-எண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் பருக்கள் மீது தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
- இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பு உண்டாகும்.
- தினமும் படுக்கைக்கு செல்லும்போது செம்பருத்தி இலையை கூந்தலில் செருகி வைத்துக்கொள்ளவும். காலையில் இலையை எடுத்து விடவும். தொடர்ந்து செய்து வர பேன், பொடுகு அகலும்.
- சுரக்காய் வாரம் இரு தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
- வாழை தண்டு சாரு, அருகம்புல் சாரு இதில் ஒற்றை குடித்து வர உடல் பெருக்கம் குறைந்து, உடல் அழகு பெரும்.
- முட்டைகோஸ் சாரு எடுத்து முகத்தில் தடவி வர முகசுருக்கம் மறையும். வறண்ட சருமம் மென்மையாகும்.
- பப்பாளி பழம் மகித்து முகம், கழுத்து, கைகளில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து பின்பு முகம் கழுவ முக அழகு கூடும்.
- தாமரைப்பூ கசாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறிவிடும்.
அழகை கூட்டுவோம், அன்பை பெருக்குவோம், ஆனந்தமாய் வாழ்வோம்.
மீண்டும் சந்திக்கிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please put your Comment here